நெல் உற்பத்தி செய்தால் மட்டும் பேதாது :உப உணவுச் செய்கையிலும் ஈடுபடுங்கள்  – கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்!

Thursday, March 2nd, 2017

நெல் உற்பத்தியில் மாத்திரம் தங்கியிருக்காது உப உணவு உற்பத்தியில் ஈடுபடுவதன் மூலம் ஏனைய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் போசனை மட்டத்தையும் உயர்த்த முடியும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

நெல் உற்பத்தியை பொறுத்தவரையில் அனுடைய கேள்வி சற்றுக் குறைவடைந்து வருகின்றது. இதற்குக் காரணம் எல்லா மாவட்டங்களிலும் நெல் உற்பத்தி மேற்கொள்ளப்படுவது இல்லை. வெளிநாடுகளிலும் இருந்து நெல் இறக்குமதி செய்யப்படுகின்றது.

தற்போது நெல்லை உற்பத்தி செய்வதல்ல பிரச்சினை, அதனை சந்தைப்படுத்துவதிலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே நெல் உற்பத்தியில் மாத்திரம் நின்றுவிடாது உப உணவுச் செய்கையை அதிகரிப்பதன் மூலம் ஏனைய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், அதனூடாக நல்ல சந்தை வாய்ப்பையும் அதற்கும் மேலாக போசாக்கு மட்டத்தையும் உயர்த்த முடியும் என்றார்.

kilinochch

Related posts: