நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கி செயலிழப்பு!

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கக் கட்டமைப்பு மீண்டும் செயலிழந்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத் தக்க மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக் ஷன ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
நேற்றிரவு 8.20 அளவில் இந்த மின்பிறப்பாக்கக் கட்டமைப்பு செயலிழந்ததாகவும் இதேவேளை நேற்றிரவு செயலிழந்த லக்சபான மின் நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களிலும் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் நேற்றிரவு சில மணிநேரம் மின்சார விநியோகம் தடைப்பட்டது.இதேவேளை, நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்கனவே செயலிழந்த முதலாவது மின்பிறப்பாக்க கட்டமைப்பின் செயற்பாடுகள் தற்போது ஆரம்பமிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|