நீர் கட்டணம் தபால் நிலையத்தில் செலுத்லாம்!

நீர் கட்டணங்களை தபால் நிலையத்தினூடாக செலுத்துவதற்கான நடவடிக்கைகளை பெற்றுக் கொடுக்கவுள்ளதாகவும் இதற்கான சட்ட வரைபினை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தபால் மா அதிபர் ரோஹன அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிரகாரம் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் பயனாளர்கள் நீர் கட்டணத்தை தபாலகத்தின் ஊடாக செலுத்த முடியும் என தபால் மா அதிபர் கூறியுள்ளார்.
Related posts:
விரைவில் தூய்மையான ஆட்சி - ஜனாதிபதி !
தாதியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!
மே 11 ஆம் திகதியின் பின்னர் பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு புகையிரத திணைக்களம் அமுல்ப்படுத்தியுள்ள ...
|
|