மே 11 ஆம் திகதியின் பின்னர் பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு புகையிரத திணைக்களம் அமுல்ப்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய நடைமுறை!

Thursday, May 7th, 2020

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கிய பணியாளர்களின் பெயர்களின் பட்டியலுக்கமைய ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள குறுந்தகவலில் உள்ளவர்கள் மட்டுமே புகையிரதங்களில் பயணிக்க முடியும் என புகையிரதத் திழணக்களத்தின் கட்டுப்பாட்டாளர் திலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் மே 11 ஆம் திகதி நாட்டு மக்களின் வாழ்க்கை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்கக்ப்படுகின்றது. இந்நிலையில் அத்தியாவசிய அலுவலக கடமைகளைத் தொடங்கும் போது ஊழியர்களின் போக்குவரத்தினை எளிதாக்குவதற்கு தேவையான வகையில் அலுவலக புகையிரதங்களை பயன்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு பத்து முக்கியமான ஆலோசனை குறிப்புகள் வழங்கப்படவுள்ளது. இதற்கு இணங்காத பயணிகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸார், இராணுவம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படைகள் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் புகையிரத திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் திலந்த பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்

1.      ரயில் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிதல்,

2.      பயணிகளுக்கு இடையில் ஒரு மீட்டர் தூரத்தை கடைபிடித்தல்,

3.      ரயில் நிலையத்தில் கைகளை கழுவுதல்,

4.      கிருமிநாசினி தெளித்தல்,

5.      ரயில் நிலையத்திற்கு சீக்கிரம் வந்து சேருதல்,

6.      ரயிலில் பயணிப்பதற்கு குறுந்தகவல் பெற்றிருத்தல்,

7.      கூட்டாக ஒன்றுகூடுவதை தவிர்த்தல்,

8.      எச்சில் துப்புதல் மற்றும் குப்பை போடுதலை தவிர்த்தல்,

9.      பொது கழிப்பறைகள் பயன்படுத்தவதனை முடிந்தளவு தவிர்த்தல்,

10.     ஒதுக்கப்பட்ட இடங்களில் மாத்திரமே பயணித்தல், போன்ற அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: