நீரை சிக்கனமாக பயன்படுத்தவும்: பொதுமக்களிடம் கோரிக்கை!

வரட்சிக் காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தலைவர் கே.ஏ.அன்சார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
வாகனங்களைக் கழுவுதல் வீட்டுத் தோட்டம் விலங்குகளை குளிப்பாட்டுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு மாற்று நடவடிக்கைகளைப் பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது நிலவும் வரட்சியுடனான காலநிலையை எதிர்கொள்வதற்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை திட்டம் வகுத்துள்ளது.
கண்டி பொலன்னறுவை ஹம்பாந்தோட்டை அம்பாறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே கடும் வரட்சிக் காலநிலை நிலவுகின்றது.
இந்த மாவட்டங்களில் நீரை விநியோகிப்பதற்கு முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தலைவர் கே.ஏ.அன்சார் தெரிவித்துள்ளார்.
Related posts:
பெண்கள் மட்டுமே பயணிக்கும் வகையில், புகையிரதங்களில் பெட்டி ஒதுக்க நடவடிககை - அமைச்சர் காமினி லொக்கு ...
PCR பரிசோதனை அறிக்கையில் தாமதம் என பலரப்பினராலும் குற்றச்சாட்டு!
அரச உத்தியோகத்தர்களின் விடுமுறையை 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைப்பதற்கு யோசனை!
|
|