நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

வறட்சியான காலநிலை காரணமாக சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, நகர்ப்புற மற்றும் கீழ் மட்ட பகுதி பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் நீர் தேக்கங்களில் நீர்மட்டம் மேலும் குறைவடைந்துள்ளதாக அதன் தலைவர் கே.ஏ. அன்சார் கூறினார். நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரின் தேவை அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் நீர் வழங்கப்படாத பிரதேசங்களில், வறட்சியான காலநிலை காரணமாக பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்காக இலவசமாக நீர் விநியோகம் செய்யப்படுகின்றது. நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் வசிக்கும் பொது மக்கள் அவர்களது குடிநீர் தேவை தொடர்பில், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் இலக்கமான 1939 இற்கு தொடர்பை ஏற்படுத்தி தமது மாவட்ட செயலகங்களுக்கு அறியப்படுத்தலாம் என்று நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கூறியுள்ளார்.
Related posts:
|
|