நீதிமன்ற உத்தரவினை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை!

நீதிமன்ற உத்தரவினை மீறும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீதிமன்றின் உத்தரவினை உதாசீனம் செய்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தரப்பினருக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர எச்சரிக்கை விடுத்துள்ளார். கண்டியில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கூடாது என நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
மாவனல்ல நகரிலும் இவ்வாறான ஓர் உத்தரவினை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. கூட்டு எதிர்க்கட்சியினர் பாத யாத்திரைப் போராட்டம் ஒன்றை இன்று நடத்தவுள்ள அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதுடில்லியில் உருவாகும் பௌத்த தூபி!
சண்டிலிப்பாய் பிரதேசத்தில் 197 பேருக்கு வீட்டுத்திட்டம்!
எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் தனியார் துறையினரால் இயக்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...
|
|