நிர்ணய விலையில் பொருட்களை விற்று சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் யாழ்.வணிகர் கழகம் அறிவுறுத்து!
Tuesday, January 31st, 2017
அரசாங்கத்தின் புதிய விலை நிர்ணயத்திற்கு அமைவான வரையறுக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் சட்ட நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ்.வணிகர் கழகம் அனைத்து பலசரக்கு வர்த்தகர்களுக்கம் அறிவறுத்தியுள்ளது.
அரசாங்கம் 6 உணவுப் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்துள்ளது. இதனடிப்படையில் சீனியின் ஆகக் கூடிய சில்லறை விலை 93ரூபா எனவும், 1கிலோ மைசூர் பருப்பின் ஆகக் கூடிய சில்லறை விலை ரூபா 159 எனவும், 1கிலோ உருளைக்கிழங்கின் விலை ஆகக் கூடிய சில்லறை விலை ரூபா 115 எனவும் ஒரு கிலோ பயறு 205 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் டுபாயில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நெத்தலி ரூபா 405ரூபாவாகவும், தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் நெத்தலி ரூபா 490 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே அரசாங்கத்தின் புதிய விலை நிர்ணயத்திற்கு அமைவான மேற்படி பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் சட்ட நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ்.வணிகர் கழகம் அனைத்து பலசரக்கு வர்த்தகர்களையும் கேட்டுக்கொள்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
|
|
|


