நியாயம் கோரி கொழும்பில் போராட்டம்!

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் ஆகிய சில கோரிக்கைகளை முன்வைத்து, முன்னிலை சோசலிசக் கட்சி உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தின் முன்னாள் அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலுள்ள தமிழர்களின் காணிகளில் இன்னும் இராணுவத்தினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதால், அம் மக்களின் காணி உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தள்ளனர்.
Related posts:
நேபாள புதிய பிரதமருக்கு பிரதமர் ரணில் வாழ்த்து!
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: கணவன், மனைவியை கட்டிவைத்துவிட்டு 16 இலட்சம் பெறும...
அரச நிறுவனங்களுக்கு வருகை தரும் பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு உள்நாட்டலுவல்கள், மாகாண...
|
|