நியம அளவைவிட உணவில் சீனி,உப்பு கொழுப்பு சேர்க்கப்பட்டால் வரி அறவீடு!
Monday, September 5th, 2016
உணவுப்பொருட்களில் நியம அளவைவிட சீனி, உப்பு மற்றும் கொழுப்புகளின் அளவு சேர்க்கப்பட்டிருந்தால் வரி அறவிடப்போவதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பிரந்தியத்தின் 69 கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பிரந்தியத்தின் 69 கூட்டத் தொடரின் தலைவராக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சகல எம்.பிக்களுக்கும் சபாநாயகர் அறிவுரை!
அதிகளவான வீதித்தடைகள் – பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டு இறுக்கமான கண்காணிப்பில் யாழ் நகர்!
ஜனவரி மாதம்முதல் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவ...
|
|
|



