நிதியமைச்சருடன் போக்குவரத்து தொழிற்சங்கங்கம் சந்திப்பு!

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
புதிய வரவு செலவுத்திட்டத்தில் மோட்டார் வாகனங்களுக்காக உள்ளடக்கப்பட்டுள்ள ஆகக்குறைந்த தண்டப்பணத்தினை 2500 ரூபாவாக அதிகரித்தமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தண்டப்பணத்துக்கு எதிராக நாட்டின் பல பாகங்களிலும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்ததுடன், வெவ்வேறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் இந்த சந்திப்பின் போது குறித்த விடயம் தொடர்பில் தீர்க்கமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
பேருந்து மீது தாக்குதல்.!
திருமலை வைத்தியசாலைகளில் காணப்படும் கட்டில்களின் தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை - மாவட்ட பிராந்திய ...
தேர்தலை நடத்தத் தயார் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவிப்பு!
|
|