நாவலர் வீதியில் 32 பவுண் நகைகள் கொள்ளை!

Sunday, October 30th, 2016

யாழ். நாவலர் வீதியில் உள்ள வீடொன்னில் மிகவும் சாதுரியமான முறையில் 32 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது;

இச்சம்பவம் தொடர்பாக தெரியவரவதாவது – அரச உத்தியோகத்தர் குடும்ப உறுப்பினர்கள் காலை 9 மணியளவில் வீட்டினை பூட்டிய பின்பு வழமை போன்று பணிக்குச் சென்றுள்ளனர். இதில் கணவர் கூட்டுறவுத் திணைக்களத்திலும் மனைவி ஆசிரியராகவும் பணிபுரிகின்றார்.

இவ்வாறு பணிக்குச் சென்றவர்களின் வீட்டிற்கு ஆசிரியரின் தாயார் 10 மணியளவில் சென்று திரும்பிய நிலையில் அவசர பணி நிமித்தம் ஆசிரியரும் விடுமுறை பெற்று 11 மணிக்கு வீட்டுக்கு சமூகம் தந்துள்ளார்.

இந்த இடைவெளி நேரத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டின் முகப்புக் கதவினை உடைத்து உள் நுழைந்து வீட்டின் அனைத்து இடங்களையும் சல்லடை இட்டுத் தேடுதல் நடாத்தியுள்ளனர். அவ்வாறு நடாத்திய தேடுதலின்போது மிகவும் சாதுரியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் அதிக விலையுயர்ந்த கவறிங் நகைகளும் இருந்தபோதிலும் அதில் தங்க ஆபரணங்கள் மட்டும் இனங்காணப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.

கொள்ளையிடப்பட்ட நகைகளில் ஆசிரியரின் தாலிக்கொடி , அட்டியல் , பதக்கம் சங்கிலி மற்றும் சாதாரண சங்கிலி என 32 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு முறையிடப்பட்டதனையடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றபோதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. அடுத்த வீட்டில் பொலிஸ் புலனாய்வாளர்கள் தங்கியிருந்த போதிலும் இது நடைபெற்றமை ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

kolllai_nelliyadi_01

Related posts:

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுங்கள் - ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அத...
நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் இலங்கைக்கு ஆதரவு!
சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்பள்ளிக் கல்வி முறையை உருவாக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜ...

முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அனைத்து முக மறைப்புக...
கடந்த பருவ காலங்களில் உரங்களை விற்பனை செய்து 10.05 பில்லியன் ரூபா வருமானத்தைவிவசாய அமைச்சு ஈட்டியுள...
வடக்கு மாகாண ஆளுநர் - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு – வடக்கு மக்களின் வாழ்வாதார மேம்பாட...