நாளை கூடுகின்றது புதிய ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர்!

2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு நாளை 9 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
முன்பதாக கடந்த டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற விவகாரக் குழு இதனை தீர்மானித்திருந்தது.
அதன்படி, நாளை 9 ஆம் திகதி காலை 09.30 மணிமுதல் 10.30 வரை வாய்வழி வினாவுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்போது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கச் சட்டமூலத்திற்கான அலுவலகம் ஸ்தாபிக்கும் திருத்தச்சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, தேசிய நீரியல் திருத்தச்சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கடல் மட்டம் அதிகரிக்கும்?
வடக்கு மாகாண பொதுச்சேவையின் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை!
அரச அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடராத வகையில் புதிய சட்டம் - மகிந்த ராஜபக்ஷ!
|
|