நாளைமுதல் 18 ஆம் திகதிவரை கடும் மழை பெய்யும்! – வளிமண்டல திணைக்களம்!

நாளை முதல் 18 ஆம் திகதி வரை நாடு முழுவதும் கடும் காற்றுடன் மழை பெய்யும் காலநிலை உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, எஹெளியகொட, அயகம மற்றும் பலங்கொடை ஆகிய பிரதேசங்களில் நிலச்சரிவு அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வாழும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.
மேலும் ஹெட்டன் கொழும்பு பிரதான பாதையில் தற்போது அதிக பனிமூட்டம் காணப்படுவதால் சாரதிகள் அவதானமாக செயற்படுமாறு காவற்துறை கோரியுள்ளது.
Related posts:
மாணவி வித்தியாவின் தாயை மிரட்டியவர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு!
ஐ.நா. விசேட அறிக்கையாளர் - அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு
வரும் திங்கட்கிழமையிலிருந்து பார்த்தீனிய ஒழிப்பு வாரம் : யாழ். மாவட்டச் செயலர்!
|
|