நாட்டில் கடும் பொருளாதார கஷ்டம் ஏற்படும் – அமைச்சர் சம்பிக்க ரணவக்க!
Monday, March 27th, 2017
அமெரிக்கா வட்டி வீதத்தை அதிகரிக்க எடுத்த தீர்மானம் காரணமாக இலங்கையில் எதிர்காலத்தில் கடும் பொருளாதார கஷ்டம் ஏற்படும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதனை எதிர்கொள்ள வேண்டுமாயின் குறுகிய கால நடவடிக்கைகளுக்கு செல்லாது, நிரந்தர பொருளாதார கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச வளங்களை விற்பனை செய்வதன் மூலமும் அரச வளங்களை மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலமும் எமது அந்நிய செலாவணி பிரச்சினையை தற்காலிகமாக தீர்க்க முடியும். எனினும் இலங்கை மீண்டும் மீண்டும் இந்த நெருக்கடியை எதிர்நோக்கும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்
Related posts:
யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வாகனம் விபத்து - மோட்டார் சைக்கிளில் சென்ற மூவரில் ஒருவர் உயி...
20 ஆவது திருத்தம் திருத்தங்களுடன் நீதி அமைச்சரால் முன்வைப்பு – நாடாளுமன்றில் கடும் வாதப் பிரதிவாதம்!
பெற்றோல் விலை உயர்வு, கட்டண திருத்தத்தில் தாக்கம் செலுத்தாது - அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் ...
|
|
|


