நாட்டின் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ஜனாதிபதியினால் விருது!

Friday, October 28th, 2016

புதிய கண்டுபிடிப்புக்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பு நெலும்பொக்கன அரங்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

நடைபெற்ற இந்த நிகழ்வினை விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆய்வுகள் அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் புதிய கண்டுபிடிப்பாளர்கள் தொடர்பான தேசிய தினத்துடன் இணைந்ததாக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் ஆறு பேர் புதிய கண்டுபிடிப்புக்களுக்கான விருதுகளை பெற்றார்கள். நாரம்மல மயுரபாத கல்லூரியைச் சேர்ந்த பி.கே.ஏ.என்.கங்கொடவில என்ற மாணவன் சிறப்பு விருதை பெற்றார். தேசபந்து கலாநிதி ஏ.என்.எஸ்.குலசிங்கவின் ஜனன தினத்தை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியிடப்பட்டது.  சுமார் எண்ணாயிரம் படை வீரர்கள் விருது பெற தகுதி உடையவர்களாக காணப்படுகிறார்கள். அவர்களுக்கு எதிர்காலத்தில் விருதுகள் வழங்கப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்

2b995059806374abcad77ea74086c32d_L

Related posts: