நாட்டின் அடுத்த அரச தலைவர் சர்வாதிகாரியாக இருக்கமுடியும் என்று கூறுகிறது பொதுபலசேனா!

Thursday, July 26th, 2018

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய ஒருவரே அரச தலைவராக வேண்டும். சில நேரங்களில் அவ்வாறு வரும் ஒருவர் சர்வாதிகாரியாக இருக்க முடியும். அது எமக்கு முக்கியமில்லை என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் வேட்பாளர்களாக யார் நிறுத்தப்படவுள்ளனர் என்பது குறித்து தற்போது கொழும்பு அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. கூட்டு எதிர்க்கட்சியும் குறித்த விடயம் தொடர்பில் பேசி வருகின்றனர். இந்தநிலையில் எமக்குத் தனிநபர்கள் யார் என்பது முக்கியமில்லை. முதுகெலும்பு உள்ள ஒருவரே எமக்குத் தேவையாக இருக்கின்றார்.

அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்றவர் சர்வாதிகாரியா? ஜனநாயகவாதியா? என்பது குறித்துத் தமக்குப் பிரச்சினையில்லை.

நாட்டுமக்களின் மனங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றக்கூடிய ஒருவரே நாட்டின் அரச தலைவராக வேண்டும்.

சில நேரங்களில் அவ்வாறு வரும் ஒருவர் சர்வாதிகாரியாக இருக்க முடியும். அது எமக்கு முக்கியமில்லை. என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

யுத்தத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் தற்போது எவரும் அதிகாரங்களில் இல்லை: பிரச்சினைகளை என்னுடன் இலக...
புதிய கல்வி முறை உருவாக்கப் பணிக்காக தேசிய கல்வி நிறுவகத்துடன் 150 நிபுணத்துவ ஆசிரியர்கள் இணைப்பு!
அதிவேகம் – கட்டுப்பாட்டை இழந்து கல்லுண்டாயில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து குடைசாய்ந்தது!