நாட்டுக்குள் போதைப்பொருட்களை வருவதை தடுக்க விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது – ஜனாதிபதி!

Wednesday, September 14th, 2016

நாட்டுக்குள் போதைப்பொருட்களை கொண்டுவருவதை தடுப்பதற்குத் கடந்த காலங்களை விட கூடுதலான பாதகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எமது நாடு ஓர் அழகிய தீவாக காணப்பட்டபோதும், கடத்தல்காரர்கள் அதனை பிழையாகப் பயன்படுத்துவதாகின்றனர். இன்று வெளிநாடுகளில் இருந்து பாரியளவிலான போதைப்பொருட்கள் எமது நாட்டுக்குக் கடத்தப்படுவது பாரதூரமானதொரு சவாலாக மாறியுள்ளதெனத் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (12) இடம்பெற்ற மதுவிலக்கு விருது விழாவில் உரையாற்றியபோதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

கடந்த காலங்களில் நாட்டில் புகைபிடித்தல் ஒப்பீட்டு ரீதியாகக் குறைவடைந்துள்ள போதிலும் போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். போதைப்பொருள், போதை மாத்திரைகள் போன்றே சட்டவிரோத மதுசாரங்கள் இன்று பாடசாலைகளுக்கு அண்மையிலும் கிராமங்களிலும் வியாபிக்கத் தொடங்கியுள்ளன. இதனைத் தடுப்பதற்காக அரசாங்கம் உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் மாத்திரம் வெற்றிகொள்ள முடியாது. சமூகத்தில் பொறுப்புவாய்ந்த அனைவரினதும் கூட்டுப் பொறுப்பான இதனை மேற்கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

 epdpnews10806413_10152985059136327_3114651442318091324_n-720x480_15316

Related posts: