நாடு முழுவதும் பழ உற்பத்திக் கிராமங்கள் அமைக்க முடிவு!
Friday, November 18th, 2016
நாடு முழுவதும் பழ உற்பத்திக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளதாக விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் வசந்த அளுத்விகார தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இந்த வேலைத் திட்டம் அடுத்த வருடம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார். தேசிய உணவு உற்பத்தி வேலைத் திட்டத்திற்கு அமைய ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், ஒவ்வாரு பழ உற்பத்திக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன. சேதப் பசளை பயன்பாடு மீது விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். மேலும் சேதப் பசளை பயன்பாடு தொடர்பாக கமநலசேவை மத்திய நிலையங்களில் தனியான அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts:
மகோகனி மரத்தை வெட்ட முயற்சித்த 4 பேர் கைது!
பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணனி - பட்டம் பெற்றும்வரை கடன் தொகையை செலுத்த தேவையில்லை - ப...
சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடியுங்கள் – மட்டு மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத...
|
|
|


