நாடு திரும்பிய பெண் விமானத்தில் மரணம்!
Saturday, April 8th, 2017
இலங்கை நோக்கி வந்த விமானத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (07) அதிகாலை 4.50 இற்கு குவைத்திலிருந்து இலங்கை வந்த விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், குறித்த பெண் மரணமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர், பன்னல பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான மூன்று குழந்தைகளின் தாய் ஒருவர் எனவும், இவர், வீட்டு பணிப் பெண்ணாக வெளிநாடு சென்று நாடு திரும்பிய வேளையிலே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.குறித்த பெண்ணின் கணவரும் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அமைச்சர்களின் பதவியை பறிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்?
பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கு புதிய சம்பளத் திட்டம்!
ஆலய உற்சவங்கள் மற்றும் விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் யாழ் மாவட்ட அரச அதிபர் விசேட...
|
|
|


