அமைச்சர்களின் பதவியை பறிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்?

Sunday, September 25th, 2016

கடமைகளை சரிவர செய்யத் தவறும் அமைச்சரவை அமைச்சர்களது பதவியை பறிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சுக்களின் முன்னேற்ற அறிக்கை கவனத்திற் கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அமைச்சரவை அமைச்சுக்களின் முன்னேற்ற அறிக்கை கவனத்திற் கொள்ளப்படவுள்ளது.

முன்னேற்ற அறிக்கையில் கடமைகளை சரியாக செய்யத் தவறிய சில அமைச்சர்களிடமிருந்து அந்தப் பதவிகள் பறிக்கப்படவுள்ளன. இவர்களுக்க இராஜாங்க அல்லது பிரதி அமைச்சுப் பதவிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வார இறுதி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர்களின் செயற்பாடுகள், ஆற்றப்பட்டுள்ள பணிகளின் எண்ணிக்கை, தொழிற்சங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட முரண்பாடுகள், அமைச்சுக்களின் முன்னேற்ற அறிக்கை போன்றவற்றின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. அமைச்சரவை மாற்றத்தின் சில அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இராஜாங்க அமைச்சர்கள் சிலருக்கு அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.வரவு செலவுத்திட்ட யோசனை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஜனாதிபதியும் பிரதமரும் ஏற்கனவே இணங்கியுள்ளனர். அமைச்சரவை மாற்றம் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

cabinet656565

Related posts:


206 ஆவதாக இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியால் முழு நாடுக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது – எச்சரிக்கை விடுக...
உள்ளூராட்சிச் சபை தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் - சபையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
ஆசிரியர் இடமாற்றத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்களாயின், அவ்வாறான இடமாற்றங்கள் ஒத்திவைக்கப்படும் - ...