நாடுமுழுவதும் கடும் வெப்பத்துடனான காலநிலை தொடரும் – முடிந்தளவு நீர் சத்துக்கள் உணவுகளை உட்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்து!

Thursday, August 27th, 2020

நாடுமுழுவதும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதையடுத்து மக்களை நாளாந்தம் சுமார் 6 லீற்றர் நீர் பருகுமாறு சிறுநீரக நோய் தொடர்பான உள்ளூர் பரிசோதனை குழு உறுப்பினரான பேராசிரியர் ஜயசுமன கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் போதுமான அளவு குடிநீர் பருகவில்லை என்றால் சிறுநீரகத்தில் பாதிப்புகள் ஏற்பட கூடும் எனவும் அதற்கு மேலதிகமாக சருமத்திற்கும் பாதிப்பு ஏற்பட கூடும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

காலை 10 மணி முதல் மாலை 3 வரையான காலப்பகுதியில் முடிந்தளவு ஓய்வில் இருக்குமாறும், பிற்பகல் வேளைகளில் பயணங்கள் மேற்கொள்ளும் போது குடை ஒன்று அல்லது தலை கவசம் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முடிந்தளவு இளநீர் மற்றும் நீர் சத்துக்கள் அதிகம் உள்ள பழங்கள் மற்றும் மரக்கறிகளை உட்கொள்ளுமாறு அவர்  பொதுமக்களிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: