நாடாளுமன்றத்தைக் கூட்டினால் தேர்தலைப் பிற்போட நேரிடும் -தேர்தல்கள் ஆணைக்குழு?

Monday, January 29th, 2018

எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டினால் பெரும்பாலும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடுவதற்குகான வாய்ப்பகள் உருவாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 8ஆம் திகதி கூட்டுமாறு சபாநாயகருக்கு தாம் அறிவித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மொரவக்க பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.

இது தொடர்பிலான கடிதத்தை இன்று சபாநாயகருக்கு அனுப்பவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் பிரதமர் நாடாளுமன்றத்தைக் கூட்டினால் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னரான ஒரு நாளில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: