நாடளாவிய ரீதியில் 43ஆயிரத்து 895 டெங்குநோயாளர்கள் இனங்காணல்!

Tuesday, October 25th, 2016

நடளாவிய ரீதியில் கடந்த 10 மாத காலப்பகுதியில் 43ஆயிரத்து 895 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிக டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலே கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,கடந்த 10 மாத காலப்பகுதியில்; 43ஆயிரத்து 895 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தில் 13,669 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 5702 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 2,917 பேரும் டெங்கு நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 1,849 பேரும் குருநாகலில் 2,139 பேரும் கண்டி மாவட்டத்தில் 3,541 டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை மக்கள் டெங்கு நோய் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருப்பதுடன் மழை நீர் தேங்கக்கூடிய காரணிகளை அப்புறபடுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் டெங்கு நோய் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட வேலைத்திட்டம் சகல மாவட்டங்களிலும் பிரதேச காரியாலயங்களினூடாக முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் 3நாட்களுக்கு தொடர்ந்தும் காய்ச்சல் இருப்பின் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

15-1350283147-dengu-fever600

Related posts: