நல்லூர் பிரதேச சபையின் எல்லைக் குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மதில்கள் இடித்து அழிப்பு
Saturday, April 2nd, 2016
சபையின் அனுமதியின்றியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த இரு மதில்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி வளாக வீதி அண்மையில் புனரமைக்கப்பட்ட போது குறித்த வீதி மற்றும் கொக்குவில் பகுதி அம்மன் வீதி ஆகிய பகுதிகளில் உரிய அனுமதியின்றியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் அமைக்கப்பட்டிருந்த மதில் பிரதேச சபையின் பைக்கோ வாகனம் மூலம் இடித்து அகற்றப்பட்டுள்ளன.
சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீதியோரங்களில் மதில்கள் அமைக்கும் போது உரிய அனுமதியை முன்கூட்டியே பெற்று அமைக்குமாறும், தவறும் பட்சத்தில் அவ்வாறு அமைக்கப்படும் மதில்கள் உடனடியாக இடித்து அகற்றப்படுமெனவும் நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் மேலும் எச்சரித்துள்ளார்.
Related posts:
19 ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் பரிந்துரை அறிக்கை இரண்டு வாரங்களில் அமைச்சரவையில்...
ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் - ஐவர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா ...
பக்தர்களிடம் நல்லூர் ஆலய நிர்வாகம் விடுத்துள்ள கோரிக்கை!
|
|
|


