நல்லூர் பிரதேச சபைக்குப் புதிய செயலாளர் நியமனம்!
Friday, January 13th, 2017
நல்லூர் பிரதேச சபையன் செயலாளராக இதுவரை பதவி வகித்து வந்த அன்னலிங்கம் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள நிலையில் சுந்தரேஸ்வரன் சுதர்சன் புதிய செயலாளர் கடந்த 2ஆம் திகதி முதல் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 2016 டிசம்பர் மாதம் வரை ஊர்காவற்றுறையின் பிரதேச செயலாளராக இருந்து வந்த சுந்தரேஸ்வன் சுதர்சன் யாழ்.மாநகர சபை, மானிப்பாய் பிரதேச சபை என்பவற்றில் முகாமைத்துவ உதவியாளராகவும் கடமையாற்றி அதிசிறப்பு பரீட்சையில் சித்தி பெற்று செயலாளராக நியமனம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
தையல்கடை மீது விசமிகளின் தாக்குதல்!
இலங்கை எதிர்கொள்ளும் உள்நாட்டு வெளிநாட்டு சவால்கள், அரசியல், சமூக பொருளாதார சீர்திருத்தங்களை செயற்பட...
இணைய வழி கடவுச்சீட்டு முறைமையில் 3 ஆயிரத்து 265 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் - குடிவரவு மற்றும் குடியக...
|
|
|


