நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாய்களைப் பதிவு செய்யக் கோரிக்கை !
Friday, March 10th, 2017
யாழ். நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியை வதிவிடமாகக் கொண்டவர்கள் தமது வளர்ப்பு நாய்களை இந்த மாதம்-31 ஆம் திகதிக்கு முன்னர் நல்லூர், கொக்குவில் உப அலுவலகங்களில் உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பதிவு செய்யுமாறு நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் சு.சுதர்ஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தக் காலப் பகுதிக்குள் பதிவு செய்யப்படாத வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related posts:
வித்தியாவின் ஊரிலுள்ள குடும்பங்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிவான் பணிப்பு!
தேசப்பற்றாளர்களாகினர் தேசத்துரோகிகள்!
உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை - இராணுவ...
|
|
|


