நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரிக்கநடவடிக்கை

Monday, April 10th, 2017

இலங்கையில் 2019ஆம் ஆண்டளவில் நன்னீர் மீன் உற்பத்தி ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் தொன் வரை அதிகரிக்கப்படுமென்று கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முறுத்தவெல நீர்வாழ் உயிரின உற்பத்தி மத்திய நிலையத்தை  அமைச்சர் திறந்து வைத்தhர். அங்கு உரையாற்றிய அமைச்சர் இதற்காக இந்த வருடத்தில் 80 மில்லியன் மீன் குஞ்சுகள் நீர்த்தேக்கங்களில் விடப்படுமென குறிப்பிட்டார்.

இதற்காக 400 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட தெற்கு பிரதேச நீர்த்தேக்கங்களுக்கு இந்த உற்பத்தி நிலையத்தின் ஊடாக மீன் குஞ்சுகள் வழங்கப்படும். நீரியல்வளங்களின் அபிவிருத்திக்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் இந்தத் தொகையை மேலும் அதிகரிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts: