நச்சுத்தன்மை உள்ள உணவினால் இருதய நோய் அபத்து!

Friday, October 14th, 2016

நாட்டில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையிலும் பார்க்க இதயத்தில் கொழுப்பு சேர்வதினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உணவு தயாரிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் இணைப்பாளர் வைத்தியர் கே.எஸ். தஹநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது சிறுநீரக நோயினால் பாதிப்புக்குள்ளாவோரை விட இதயத்தில் அதிகம் கொழுப்பு சேர்வதினால் ஈரல் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலையை நாடுவோரின் எண்ணிக்கையே அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

நச்சுத்தன்மை கொண்ட உணவை பயன்படுத்துவதனாலேயே அதிகம் இதயத்தில் கொழுப்பு சேர்வதாகவும் இதற்குத் தீர்வாக நச்சுத்தன்மையற்ற தேசிய உணவுப்பழக்கத்தில் ஈடுபட வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலும் சேதனப் பசளையைப் பயன்படுத்தி ஏழாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கைகள் கடந்த போகத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0bd5c34cc004d255453eaddfacb7b137_L

Related posts: