தொழில் நுட்பக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்!

நாடளாவிய ரீதியில் அரச தொழில் நுட்பம் மற்றும் தொழில் நுட்பவியல் கல்லூரிகளில் நடத்தப்படும் கற்கை நெறிகளுக்கான 2017ஆம் கல்வியாண்டில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை தொழில் நுட்ப பயிற்சி திணைக்களம் கோரியுள்ளது. நாட்டிலுள்ள 9 தொழில்நுட்பவியல் கல்லூரிகளிலும் 27 தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் பகுதிநேர, முழுநேர அடிப்படையில் நடத்தப்படும் பல்வேறு தொழில்நுட்ப கற்கை நெறிகளுக்கான தகுதியுள்ளோர் விண்ணப்பங்களை நவம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கலாம்.
இக் கல்லூரிகளில் தொழில்நுட்ப கல்வியைப் பயிலும் மாணவர்களுக்கு இரத்மலானையில் அமைந்துள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படும். எழுபது வகையான கற்கை நெறிகள் மேற்படி கல்லூரிகளில் பகுதிநேரமாகவும், முழுநேரமாகவும் கற்பிக்கப்படும். இக் கல்லூரிகளில் சேர்ந்து கொள்வதற்கான ஆகக் குறைந்த கல்வித் தகமை தரம் 9 என்பதுடன் கூடிய கல்வித்தகமை க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெற்றிருப்பதாகும். தமிழ், சிங்கள மொழி மூலம் பயிற்சிகள் இடம்பெறும்.
Related posts:
|
|