தொழில் அலுவலர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

Thursday, November 17th, 2016

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் காணப்படும் தமிழ் மொழி மூல தொழில் அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை தொழில் திணைக்களம் கோரியுள்ளது.

விசேட திறந்த போட்டிப்பரீட்சை விசேட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை என இரு பிரிவுகளாக தொழில் திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் மொழி மூலம் ஆட்களை தெரிவு செய்வதற்காக இப் பரீட்சை நடத்தப்படுகின்றது. இம் மாகாணங்களில் தொழில் அலுவலர் 2ஆம் தரத்திற்கு கூடுதலான வெற்றிடங்கள் மாவட்ட தொழில் அலுவலகங்களிலும் பிரதேச தொழில் அலுவலகங்களிலும் காணப்படுகின்றன. பல்கலைக்கழக பட்டதாரிகளும் சட்டத்தரணிகளும் இப் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றலாம். இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 14ஆம் திகதி வரை அனுப்பி வைக்கலாம். பர்Pட்சைகள் இலங்கை பரீட்சை திணைக்களத்தால் நடத்தப்படும். மேலதிக விபரங்களை இம்மாதம் 9ஆம் திகதி வெளியாகிய அரச வர்த்தமானி மூலம் அறிந்து கொள்ளலாம்.

images-53

Related posts: