தொகை மதிப்பீட்டுக்கு அடுத்த அண்டில் ரப் – டிஜிற்றல் உட்கட்டமைப்பு அமைச்சு நடவடிக்கை!

Friday, December 2nd, 2016

அடுத்த ஆண்டு முதல் தொகைமதிப்புப் புள்ளி விவரத் தகவல்களை திரட்டுவதற்கு “ரப்” களைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையின் தொழிற்பலம் தொடர்பான தகவல்களைப் பெறும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் தொகைமதிப்புப் புள்ளிவிவரவியல் திணைக்களம் மாவட்டங்களில் கணக்கெடுப்புக்களையும் மதிப்பாய்வுகளையும் நடத்தி வருகின்றது. அந்தத் தகவல்களின் அடிப்படையில் இலங்கையில் தொழில் பலம் மற்றும் தொழில் வாய்ப்பின்மை என்பன தொடர்பில் அறியப்படுகின்றது.

குடிசன மதிப்பீட்டுப் புள்ளி விவரத் திணைக்களமும் கொரிய அரசும் இணைந்து முன்னெடுக்கும் கருத்திட்டத்தின் கீழ் ரப் மூலம் தகவல்கள் சேகரிக்கும்போதே அவை தரவேற்றம் செய்யப்படவுள்ளன. குறித்த கவல்களைத் திரட்டுவதற்கு அடுத்த ஆண்டு தொடக்கம் ரப்களைப் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

population1

Related posts: