சங்கானை மண்டிகைக் குளத்தை சீரமைத்துத் தருமாறு கோரிக்கை!

Tuesday, January 17th, 2017

சங்கானை மண்டிகைக் குளம் கழிவுகளின் குதமாக மாறிவிட்டதால் அதன்மூலம் உருவாகும் கிருமிகளால் சங்கானை நகரமே பாதிப்புக்குள்ளாகின்றது இதற்கு வலி.மேற்குப் பிரதேச செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கானை விவசாயிகள் சம்மேளனம் கோரிக்ககை விடுத்துள்ளது.

வலி.மேற்கு விவசாயிகள் குழுக் கூட்டம் பிரதேச செயலர் அ.சோதிநாதன் தலைமையில் இடம்பெற்றது. அதன்போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

அக் கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

சங்கானையின் மத்திய நகரப் பகுதியில் பிரதான சங்கானை யாழ்.வீதி பிரதேச செயலகம், மீன்சந்தை, வர்த்தகக் கடைத்தொகுதி, கள்ளுத்தவறணை மற்றும் நெல் விவசாய நிலத்துக்கு மையமாக சங்கானை மண்டிககை; குளம் உள்ளது. நீண்ட பல வருடங்களாக சங்கானை மண்டிகைக்குளம் மீள் சீரமைப்பின்றி அழிவடைந்து கழிவுகளின் குதமாக மாறியுள்ளது. தினமும் சங்கானை மண்டிகைக் குளத்துக்கு அண்மையில் உள்ள மதுக்கடையில் கொள்வனவு செய்யும் பியர் ரின்களை அருகில் இருந்து குடித்து விட்டு அங்கு வீசி வருகின்றனர். அருகில் உள்ள கள்தவறணை கழிவுகளும் குளத்தையும் வாய்க்காலையும் அசிங்கப்படுத்தியுள்ளன.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சங்கானை மீன்சந்தை கழிவுகள் குளத்திலும் அயலில் உள்ள வாய்க்காலிலும் கொட்டப்பட்டன. இவற்றை விட சங்கானை நகர வெதுப்பகம் மற்றும் கடைகளில் இருந்து நேரடியாக குழாய் மூலம் மண்டிகைக் குளத்துக்கு சுத்திகரிக்கப்படாது கழிவுகள் அகற்றப்படுகின்றன. இதனை மீள் சீரமைப்பு செய்து சுற்றாடலுக்கு சுகாதாரமான குளமாக மாற்ற வேண்டிய பொறுப்பு கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு உட்பட்ட தொல்புரம் கமநலகேந்திர நிலைய பொரும்பாக அலுவலருடைய பொறுப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டது. மண்டிகைக் குளத்தை இதுவரை அசுத்தப்படுதியர்கள், நிறுவனங்கள் குளத்தைச் சுத்தமாக்க வேண்டும் எனப் பிரதேச செயலாளர் அ.சோதிநாதன் குறிப்பிட்டார்.

122

Related posts: