தேவையான எரிபொருளினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ரஷ்ய அரசாங்கத்திடம் இலங்கை மீண்டும் கோரிக்கை!

இலங்கைக்கு தேவையான எரிபொருளினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ரஷ்ய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இருவரும் விரைவில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலில் ஈடுபடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், இதுகுறித்து பேசும் நோக்கில் எதிர்வரும் சில நாட்களில் இலங்கை தூதுக்குழுவினர் ரஷ்யாவிற்கு பயணமாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கையில் நாளுக்கு நாள் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கட்டாரிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் காஞ்சன விஜயசேகர தலைமையிலான குழுவினர் நாட்டிற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|