தேசிய பூங்காவால் 6000 இலட்சம் வருமானம்!
Tuesday, September 6th, 2016
நடப்பு வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரை யால தேசியபூங்காவின் வருமானம் மாத்திரம் 6000 இலட்சங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடத்தில் சுமார் 5 இலட்சத்திற்கு அதிகமான உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யால பூங்காவை பார்வையிட வருவதாக வனஜீவராசிகள் பிரதி அமைச்சர் சுமேதா ஜயசேன தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தின் ஒரு நாளில் மாத்திரம் இதன் வருமானம் 45 இலட்சமாக காணப்பட்டதாகவும்,ஏனைய நாட்கள் வழமைப் போலவே 25 இலட்ச வருமானங்களை பெற்றதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருமானங்களானது கடந்த வருடத்தை விட அதிகம் காணப்படுவதாக யால தேசியபூங்காவின் பொறுப்பாளர் டீ.சிஹாசிங்க தெரிவித்துள்ளார். தென் ஆசியாவிலேயே அதிகம் சிறுத்தைகளைக் கொண்ட ஒரே பூங்காவாக யால பூங்கா விளங்குவதோடு, பல அபூர்வ வனவிலங்குகளை இங்கு பார்வையிடும் அரிய வாய்ப்பு கிடைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
|
|
|


