தேசிய பாடசாலையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!
Friday, February 10th, 2017
ஒரே தேசிய பாடசாலையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட உள்ளது.நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒரே பாடசாலைகளில் பத்து ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றி வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கடமையாற்றி வரும் அனைத்து பாடசாலை ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இந்த ஆசிரியர்கள் நிச்சயம் இடமாற்றம் செய்யப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts:
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை குறைக்க வேண்டிய தேவையில்லை!
தென்மராட்சியில் மேலும் ஓர் உற்பத்திக் கிராமம்!
கொரோனா பரவலின் தன்மையை இலங்கையர்கள் மறந்திருப்பதானது மிகவும் ஆபத்தானது -இராணுவ தளபதி எச்சரிக்கை!
|
|
|
யாழில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுள்ளனர் - வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவ...
வணிக விவசாயக் கருத்திட்டங்களுக்காக காணிகளை நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு வழங்க...
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் தொழில்சார்ந்த தொழிற்கல்வி கற்கைநெறிகளை ஆரம்பியுங்கள் - அ...


