தேசிய எந்திரவியல் விஞ்ஞான டிப்ளோமா பாடநெறிக்கு (NDES) விண்ணப்பம் கோரல்!
Wednesday, April 25th, 2018
கட்டுநாயக்காவில் உள்ள எந்திர தொழில்நுட்பவியல் நிறுவகத்தில் தேசிய எந்திரவியல் விஞ்ஞான டிப்ளோமா 4 வருட பயிற்சி நெறிக்கு எந்திரவியல் சிறப்பு பயிலுநர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் தேசிய பயிலுநர் கைத்தொழில் சபையால் கோரப்பட்டுள்ளன.
க.பொ.த உ/த பரீட்சையில் கணித பாடங்களில் சித்தியடைந்த 18 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த விண்ணப்பங்கள் 31.05.2018 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பப்படல் வேண்டும்.
இது தொடர்பான விபரங்களை இல.2068 (20.04.2018) வர்த்தமானியில் பார்வையிடலாம். அத்துடன் றறற.நைவ.நனர.டம என்ற இணையத்தளத்திலும் பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பானடி விபரத்தையும் விண்ணப்பப்படிவத்தையும் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை, இல 44, சோமசுந்தரம் வீதி, சுண்டிக்குளியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் பெறலாம் என மாவட்ட அலுவலர் கி.கிருஸ்ணபாலன் அறிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


