தெல்லிப்பழை பொதுநூலகம் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்!

வலி வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட தெல்லிப்பழை உப அலுவலகப் பிரிவின் கீழுள்ள தெல்லிப்பழைச் சந்திக்கு அருகாமையில் இயங்கும் பொதுநூலகம் வாசகர்களின் நன்மை கருதி இரவு 8 மணி வரை திறந்திருக்குமென நூலகத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். வலி வடக்கு இடம்பெயர்வின்போது இந்த நூலகத்தின் கட்டடங்கள் அழிவடைந்த நிலையில் இருந்தன.
இதனையடுத்து வலி வடக்கு பிரதேச சபையினால் புதிய கட்டடம் அமைக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டதுடன் நூலக சேவைகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.
இவ்வாண்டில் புதிய பிரதேச சபை தெரிவாகியதன் பின்பு தவிசாளர் சோ.சுகிர்தன் இந்த நூலக சேவை நேரத்தை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு அமைவாக இந் நூலகத்தின் சேவைகள் இரவு 8 மணி வரை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இனிப்புக் கலந்த பாக்கு விற்பனை! : வியாபாரிகளுக்கு ரூ.10,000 தண்டம்!
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்!
இராணுவம் என்ற ரீதியில் முன்னாள் போராளிகளாகிய உங்களுக்கு எங்களாலான உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம்...
|
|