சத்திரசிகிச்சை மருத்துவர்களுக்கு புதிய விதிமுறை!

Thursday, February 16th, 2017

சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்ற நோயாளர் ஒருவர் அபாயக்கட்டத்தை தாண்டும் வரை சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் அவர் அருகில் இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

பல தனியார் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டவுடன் சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்கள் வேறு கடமைகளுக்காக சென்று விடுவதாகபதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரவித்தார்.

இதனால் நோயாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய விதிமுறை பின்பற்றப்படுகின்றதா என்பதை மேற்பார்வை செய்வதற்காக குழுவொன்றை ஈடுபடுத்தவுள்ளதாகவும் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் தனியார் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகளுக்காக செலுத்தும் அதிக கட்டணத்திற்கு நிகரான சேவையை நோயாளர்கள் பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

doctors

Related posts: