தெல்லிப்பழை  துர்க்காபுரம் பகுதியில் பட்டப்பகலில் 14 ½ பவுண் நகைகள் கொள்ளை!

Tuesday, May 24th, 2016

தெல்லிப்பழை  துர்க்காபுரம் பகுதியில் பட்டப்பகலில் வீட்டின்  முன்கதவையுடைத்து உள்நுழைந்த திருடர்கள்  14 ½ பவுண் நகைகளைக் களவாடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம்  நேற்றுத் திங்கட்கிழமை  (23-05-2016)  நடைபெற்றுள்ளது.

மேற்படி திருட்டுச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

வீட்டு உரிமையாளர்களான கணவனும்  மனைவியும் வேலைக்குச் சென்றிருந்த போது  வீட்டின் முன்கதவைத் திறந்து உள்நுழைந்த திருடர்கள் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த  6 இலட்சத்து 63 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 14 ½ பவுண் நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். மாலை வேளையில் வீட்டுக்குச் சென்ற வீட்டு  உரிமையாளர்  கதவு உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்து உள்ளே சென்று பார்த்த போது நகைகள் திருட்டுப்போன விடயம் தெரியவந்துள்ளது.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

Related posts: