தென்மராட்சியில் டெங்கு தீவிரம்: தடுப்பு நடவடிக்கை முழுவீச்சில்!

Friday, January 20th, 2017

தென்மராட்சியில் அதிகரித்து வரும் டெங்குத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த திங்கள் முதல் நேற்றுவரையான காலப்பகுதிக்குள் தென்மராட்சியில் 17பேர் டெங்குத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இந்த ஆண்டு ஆரம்பம் முதல் நேற்றுவரையான காலப்பகுதிக்குள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களில் 55பேர் டெங்குத் தொற்றுக்குள்ளானமை குருதி மாதிரிச் சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2015 ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிக அதிகமானது என்று தெரிவிக்கப்படுகின்றது.

தென்மராட்சிப் பிரதேசம் எங்கும் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பூகையூட்டல் உட்படப் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. டெங்குத் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படும் பிரதேசங்களில் சாவகச்சேரி பிரதேச சபையின் உதவியுடன் புகையூட்டல் மற்றும் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

1416383666mosquito_0

Related posts: