தென்னே ஞானாநந்த உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியல்!

Wednesday, May 24th, 2017

நீதிமன்ற உத்தரவை அவமதித்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் தென்னே ஞானாநந்த உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி மாகாண சபைக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை கிழித்து காலில் போட்டு மிதித்து நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று(23) நீதின்றத்திற்கு வருகை தந்த வேலையில்லா பட்டதாரிகளின் சங்க ஏற்பாட்டாளர், பௌத்த மத குரு தன்னே ஞானாநந்த உட்பட 4 பேரையும் இம்மாதம் 29 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நிதவான் நீதிமன்ற நீதிபதி எம்.சி.ஹம்சா உத்தரவிட்டுள்ளார்.

Related posts:

எரிபொருள் - வேலைவாய்ப்பு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு - நாடு திரும்ப...
நாட்டுக்கு தேவையான அரிசி கையிருப்பில் - இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக வாணிபம் மற...
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இனி தவணை பரீட்சை - 2024ஆம் ஆண்டுமுதல் அனைத்துப் பாடசாலைகளிலும் நடைமுறையாக...