தூங்குவது போல விளையாட்டு காட்டிய ஆசிரியரின் உயிர் பிரிந்தது!

பிள்ளைகளிற்கு தூங்குவது போல விளையாட்டு காட்ட முயன்ற ஆசிரியர் ஒருவர் கயிறு தவறுதலாக இறுகியதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் பளையில் நேற்று முன்தினமிரவு 10 மணியளவில் இடம்பெற்றது.
பளை கரந்தாய் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஸ்ணன் கோபாலகிருஸ்ணன் (வயது-37) என்ற ஆசிரியரே உயிரிழந்தவராவார்.
புதுவருட தினமான நேற்று முன்தினம் இரவு பிள்ளைகளிற்கு தூங்குவது போன்று விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்ததாகவும் இதன்போது கழுத்தில் கயிறு தவறுதலாக இறுகியுள்ளது. உடனடியாக அவரை மீட்டு பளை வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எனினும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யப் பிரஜைகள் இன்று விடுதலை!
அனைத்து இலங்கையர்களும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவரதன பகிரங்கம் கோர...
அரசாங்க அதிகாரிகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது பொது நிர்வாகம் மற்...
|
|