துரித நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!

Wednesday, April 28th, 2021

கொரோனா தொற்று நோயால் இலங்கை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும், நாடு முழுவதும் ஏராளமான நோயாளிகள் காணப்படுவதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, கொரோனா நோயாளிகளைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் செனால் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் நோயாளிகளின் எண்ணிக்கை சுகாதாரத் திறனைக் காட்டிலும் அதிகமாக இருந்தால், சுகாதார ஊழியர்களால் அதை தடுக்கவும், பராமரிக்கவும் முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, சிகிச்சை மையங்களின் திறனை அதிகரிக்கவும், தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகளின் திறன் மற்றும் வசதிகளை அதிகரிக்கவும், போதுமான ஆக்ஸிஜன் சேமிப்பை உறுதி செய்யவும், சுகாதார பணியாளர்களுக்கு போதுமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: