தீப்பிடித்த கப்பலில் வெடிபு – ஊழியர் ஒருவர் பலி!

Friday, September 4th, 2020

தீப்பற்றி எரியும் “MT NEW DIAMOND“ என்ற கப்பலில் ஏற்பட்ட வெடிப்பில் காணாமல் போயிருந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, துறைமுக அதிகார சபை, இந்திய கடற்படை, இந்திய விமானப்படை, மற்றும் இந்திய கரையோர பாதுகாப்பு படை ஆகியன இணைந்து தீயினை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சங்கமன்கந்த கடற்பரப்பில் இருந்த 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் கொதிகலனில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக குறித்த கப்பல் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

பனாமா அரசுக்கு சொந்தமான “MT NEW DIAMOND“ என்ற கப்பலே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல்...
அனைத்துக் கிராமங்களும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி - ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்க...
அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரண திட்டத்தின் கீழ் 24 இலட்சம் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படு...

உதயன் பத்திரிகையால் சீரழிந்தது யாழ்ப்பாணத்து இளம் பெண்ணின் வாழ்க்கை – அதிர்ச்சியில் மக்கள்!
கைத்தொழில் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை - ஆளுநர்கள் மற்...
உருளைக்கிழங்கு விதைகள் தொற்றுக்குள்ளான விவகாரம் - கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்திற...