திருமலையில் இரு மாதங்களில் 1000 பேருக்கு டெங்குத் தொற்று 3பேர் சாவு!
திருகோணமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி, பெப்ரவரி ஆகிய இரு மாதங்களில் 1,050 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் இதில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கயல்விழி தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 155 டெங்கு நோயாளர்களும், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 278 நோயாளர்களும், குறிஞ்சாங்கேணி பிரிவில் 68 நோயாளர்களும், மூதூரில் 318 பேருமாக மொத்தம் 1,050 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கிண்ணியாவில் மாத்திரம் 3பேர் உயிரிழந்துள்ளனர். கிண்ணியா, மூதூர், திருகோணமலை போன்ற வைத்தியசாலைகளில் அதிகளவில் டெங்கு நோயாளர்கள் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். வைத்தியசாலைகளுக்கு அதிகளவான மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார்.

Related posts:
லசித் மலிங்க பயணித்த விமானத்தில் இயந்திரக் கோளாறு!
யாழ்ப்பாணதத்தில் 10 சதவீதம் நெல் அழிவு -யாழ்.மாவட்ட விவசாயக் குழு!
சீன பாதுகாப்பு அமைச்சருக்கு இலங்கை கலாசார மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பு!
|
|
|


