திருடிய நகையினை விற்க முற்பட்ட நபரை பிடித்துப் பொலிஸில் ஒப்படைத்த நகைக் கடை உரிமையாளர்: யாழில் சம்பவம்!

Tuesday, September 13th, 2016

யாழ். அளவெட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றில் திருடிய நகையினை யாழ்ப்பாணத்திலுள்ள நகைக் கடையொன்றில் விற்க முற்பட்ட யாழ்.மல்லாகம் கல்லாரைப் பகுதியினைச் சேர்ந்த சந்தேக நபரொருவரைக் கையும் மெய்யுமாகப் பிடித்துத் தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நேற்று(12) நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

யாழ். மல்லாகம் கல்லாரைப் பகுதியினைச் சேர்ந்த நபரொருவர் அளவெட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றில் யாரும் இல்லாத நேரம் பார்த்துத் திருடியுள்ளார். திருடிய நகையினை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்திலுள்ள நகைக் கடையொன்றிற்குக் கொண்டு சென்று குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முற்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொண்டு சென்ற நகையினை வாங்கிப் பார்த்த கடை உரிமையாளர் இது தன்னுடைய கடையில் விற்பனை செய்யப்பட்ட நகை என்பதைத் தனக்குள் புரிந்து கொண்டு ஏன் விற்கிறீர்கள்? பணத்துக்கு என்ன அவசியம், ? என அவரிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டுள்ளார். நகையினைத் திருடியவர் ஒன்றுக்குப் பின் ஒன்று முரணான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நகையின் உரிமையாளர்களுக்கு இரகசியமாகத் தொலைபேசி அழைப்பினை எடுத்த கடை உரிமையாளர் ” உங்களுடைய நகை திருடப்பட்டுள்ளதா? ” எனக் கேட்டுள்ளார். ஆம். திருட்டுப் போயுள்ளது என மறுமுனையில் தெரிவிக்கவே அவர்களை நகைக் கடைக்கு வருமாறு நகைக் கடை உரிமையாளர் அழைத்துள்ளார்.

இதனையடுத்துத் திருடிய நகை கொண்டு வந்த நபரை மடக்கிப் பிடித்து வைத்திருந்த கடை உரிமையாளர் தெல்லிப்பழைப் பொலிஸாரை வரவழைத்துச் சந்தேகநபரைப் பாரப்படுத்தினார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

gold-prices-10-facts-about-the-yellow-metal

Related posts: