திண்மக் கழிவுகளை வீதிகளில் கொட்டுவோர் மீது நடவடிக்கை!
Friday, January 20th, 2017
யாழ்.மாநகரப் பகுதியில் திண்மக் கழிவுகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது. குடியிருப்பாளர்கள் தமது சுற்றாடல்களில் சேகரிக்கும் திண்மக் கழிவுகளை தரம் பிரித்து கழிவகற்றும் பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தேவையற்ற விதத்தில் வீதிகளில் கழிவுகைள கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கழிவுகளை வீதியோரங்களில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. அத்துடன் மாநகராட்சி மன்றத்தின் திண்மக் கழிவகற்றும் பொறிமுறையும் பாதிக்கப்படுகின்றது. இரவு வேளைகளிலேயே சிலர் கழிவுகளை பொதியாககி இவ்வாறு வீதியோரங்களில் கொட்டி விட்டுச் செல்கின்றனர்

Related posts:
வெளிநாட்டவர்களின் வருகை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு!
புதிய கல்வி முறை உருவாக்கப் பணிக்காக தேசிய கல்வி நிறுவகத்துடன் 150 நிபுணத்துவ ஆசிரியர்கள் இணைப்பு!
வருடத்தின் முதல் 10 மாதங்களில் 5156 பேர் கண் தானம் - தேசிய கண் மருத்துவ சங்கம் தெரிவிப்பு!.
|
|
|


