திண்மக் கழிவகற்றல் இன்று முதல் ஆரம்பம்!

Monday, November 21st, 2016

யாழ்.மாநகரப் பகுதியில் மீள் சுழற்சிக்கான திண்மக் கழிவகற்றும் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படுள்ளதுடன் குடியிருப்பாளர்கள் யாவரும் உக்கும் உக்காத பொருள்களை தரம்பிரித்து கழிவகற்றும் பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என மாநகர ஆணையாளர் வாகீசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தாவது:

மாநகர தொழிலாளர்கள் அண்மையில் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தால் மக்கள் சேகரித்து வைத்த திண்மக் கழிவுகளை அகற்றும் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த தரம் பிரிக்கப்பட்ட திண்மக்கழிவுகள் யாவும் இந்த வாரத்தில் அகற்றப்படும். திண்மக் கழிவகற்றும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் மாநகரப் பகுதி மக்கள் பூரண ஆதரவு தரவேண்டும். சேகரிக்கும் கழிவுகளை மக்கள் வீதியோரங்களில் கொட்டுவதைத் தவிர்க்கவேண்டும். தற்பொது மழை காலம் ஆகையால் இவ்வாறு வீதியோரங்களில் கழிவுகளைக் கொட்டி சுகாதாரத்துக்கு பங்கம் விளைவிக்கும் குடியிருப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். யாழ்.நகர வர்த்தகர்களும் இந்தக் கழிவகற்றல் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும். வர்த்தக நிலையக் கழிவுகளை வீதியோரம் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும். கழிவுகளைப் பொதியாக்கி அவற்றை வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக வைத்து கழிவகற்றும் பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும் – என்றார்.

vvvvvvvvvvvvvvv

Related posts: