திணைக்களங்களில் பணியாற்றும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர்- யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர்!

Friday, March 10th, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் திணைக்களங்களில் பணியாற்றும் பெண்கள் பாலியல் ரீதியான பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர் என முறைப்பாடுகள் வருவதாகவும் ஆனால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அவர்கள் தயங்குவதால் குற்றவாளிகள் தப்பிக்கொள்ள முடிகின்றது எனவும் யாழ். மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் கவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்யைில்,

திணைக்களங்களில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படும் போது விசாரணைகள் மேற்கொண்டால் தாங்கள் எதிர்நோக்கியுள்ள பாதிப்புக்களை கூறுவதற்கு தயற்குகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படும் பெண்களின் பெற்றோர், தமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதிப்படையும் என்பதால் இது குறித்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வேண்டாம் என மன்றாடி கேட்கின்றனர்.

இவ்வாறான வன்முறைகள் இழைக்கப்படும் போது நாங்கள் எமது உறுதியான எதிர்ப்பை தெரிவிப்பதுடன் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனைகளும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாது விடில் வன்முறைகளை மேற்கொள்பவர்கள் மீண்டும் மீண்டும் பல தவறுகள் செய்வதற்கு வழியேற்படுத்திக் கொடுப்பதாக அமையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் கட்டுப்படுத்துவதற்குப் பேரணிகள் மாத்திரம் நடத்துவதுடன் நின்றுவிடாது அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Related posts:

வரும் செவ்வாயன்று ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் - இராஜாங்...
இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் - அரசாங்கக் கணக்குகள் பற்...
அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் பொருளாதார முன்னேற்றத்துக்கு ...

கழிவுஎண்ணெய் கலந்த நீருக்குத் தீர்வென்ன? பாதிக்கப்பட்ட மக்களுக்குப்  பதில் கூறு! -  உலக நீர் தினத்தை...
வெளிநாட்டு தொழில் வெற்றிடத்துக்கு அனுமதியளிக்கும் காலம் 2 மணித்தியாலங்களாக குறைப்பு - இராஜாங்க அமைச...
இலங்கை எதிர்கொண்ட கடினமான காலங்களில், இலங்கையின் தேவைகளை இந்தியா மிகவும் உணர்ந்து செயற்பட்டது - இந்த...